லகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதியின் குறுக்கே அணைகளை கட்டினால் மிகப்பெரிய சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என  இயற்கை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நதி அமைப்பு என்று சொல்லப்படும் அமேசான் நதி ஒடும் பகுதிகளில், அமைந்துள்ள நாடுகள்  அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இவ்வாறு அணைகள்  கட்டுவது தொடர்ந்தால், அது அந்த பகுதிக்கு குறிப்பிடத்தக்க மற்றும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வு முடிகள் தெரியவந்துள்ளது.

மின் உற்பத்தி தேவைக்காக அமேசான் நதியின் குறுக்கே அணைகளை கட்டுவதால், ஏராளமான தாவரங்கள், மரங்கள் மற்றும் காட்டு விலங்குகள், நீர் வாழ்வன போன்றவை ஆபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது அமேசான் நதியின் குறுக்கே 400க்கும் மேற்பட்ட அணைகள் கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமேசான் நதி மற்றும் அதன் கிளை நதிகளில் இயற்கையாக தேங்கும் வண்டல் மண் நகர்வதை மோசமாக பாதிக்கலாம் என்று ‘நேச்சர்’ இதழின்  ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமேசானின் கிளை ஆறான  மடிரா  நதி ஆண்டிஸ்ஸில் இருந்து பிரேசில் வரைக்கும் பாய்கிறது. இதன் நீர் வழித்தடத்திலும், அதே போல பெருவின் மரான் மற்றும் யுகேயாளி ஆறுகளின் குறுக்கே யும் அணைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.