Random image

செல்பி எடுப்பதால் புதிய ஆபத்து! எச்சரிக்கிறார் ரூபா ஐ.பி.எஸ்.!

செல்பி எடுப்பதால் நேரும் புதிய ஆபத்து ஒன்றை ஐ.பி.எஸ். ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்தியவர், சிறை அதிகாரி ஐ.பி.எஸ்.ரூபா. இந்த விவகாரத்தில் பலவித பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு தமிழிலும் கன்னடத்திலும் திரைப்படமாக எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இவர் செல்பி குறித்து தெரிவித்த ஒரு விஷயம்  வைரலாகி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன் செய்தி ஒன்று பரவியது . அதன்படி
, சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று தகவல் வெளியானது. அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் இதே கருத்தை ஐபிஎஸ் ரூபாவும் தெரிவித்துள்ளார். “விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து பதிவிட்டால், சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி
, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது. இதன் மூலம் தொடர்பே இல்லாத குற்றத்தில் சிக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆகவே தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்.