உலகக்கோப்ப‍ை தொடர்கள் குறித்த புதிய முடிவுகள்!

துபாய்: ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த 2021ம் ஆண்டில், இந்திய மண்ணில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது. இதில், பிசிசிஐ சார்பில் கங்குலி மற்றும் ஜெய்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உலகக்கோப்பை தொடர்கள் குறித்து பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முடிவுகளின் அடிப்படையில், கொரோனா காரணமாக ரத்துசெய்யப்பட்ட டி-20 உலகக்கோப்பை தொடர், அடுத்த 2022ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, 2021ம் ஆண்டின் அக்டோபர் – நவம்பர் காலக்கட்டத்தில் இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும்.

இதுதவிர, நியூசிலாந்தில், 2021ம் ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2022ம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் காலக்கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி