சென்னை: திறன்வழித் தேர்வின் மூலமாக, கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணாக்கர்களின் விபரங்களை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு, மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் சார்பில் பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மையின மாணாக்கர்கள், பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணாக்கர்களுக்கு தனியாக கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. அதேபோல், அனைத்து வகை மாணாக்கர்களுக்கும் கிடைக்கும் வகையில், தகுதித்தேர்வு மூலமாகவும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு என்எம்எம்எஸ் என்று அழைக்கப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்தேர்வு நடத்தப்படும். திறனறி தேர்வில் தேர்வாகும் மாணாக்கர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.