காந்திநகர்

த்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் புதிய கல்விக் கொள்கையின் மாதிரி வடிவம் வரும் டிசம்பரில் வெளிவரும் என அறிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டில்லி உயர்நீதிமன்றம் கல்விக் கொள்கைகள் பற்றிய ஒரு வடிவத்தை இந்த வருட இறுதிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.   அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையின் மாதிரியை உடனடியாக வடிவமைக்க அமைச்சகம் ஏற்கனவே அமைப்பட்டிருந்த குழுவைக் கேட்டுக் கொண்டது.   கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்டிருந்த இந்த குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழுவின் தலைவராக விண்வெளி விஞ்ஞானி கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் உள்ளார்.   இவரைத்தவிர மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ்,  மற்றும் பல  பிரமுகர்கள் உள்ளனர்.    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் குழு தனது ஐந்தாவது கூட்டத்தை நிகழ்த்தியது.   அப்போது குழுவில் இந்த வருடம் டிசம்பருக்குள் மாதிரி வடிவம் அமைக்கும் பணி முடிந்து விடும் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகர், “குழு உறுப்பினர்கள் புதிய கல்விக்கொள்கையின் மாதிரி வடிவத்தை இந்த வருடம் டிசம்பருக்குள் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.  அந்த மாதிரி வடிவம்  வெளி வந்த உடன் அதை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  விவாதம் முடிந்ததும் அமுல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.