டெல்லி: கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி தவிர்த்து மற்ற பிராந்திய மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழ, அதற்கு பணிந்து தற்போது தமிழில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. பின்னர் பிராந்திய மொழி பெயா்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயா்ப்பு வெளியாகியுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டு வெளியானது.

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் மொழி பெயா்ப்பில் கூட தமிழ் மொழி இடம்பெறாதது சா்ச்சையை ஏற்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.