ஃபராக்கா ரயில் தடம்புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ரேபரேலி:

த்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து தலைநக்ர டில்லி நோக்கி ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண் டிருந்தது. இந்த ரயில் ரேபரேலி அடுத்த ஹர்சந்த்புர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளனாது. இதில்  6 பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. அப்போது ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கின படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும்,தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 27 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல்கள் அறிய ரயில்வே நிர்வாகம் அவசர கால தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

மால்டா ரயில் நிலையம் தொலைபேசி எண்கள்:  03512-266000, 9002074480, 9002024986