வாட்ஸ்அப்-ல் உங்களை கேட்காமலேயே குழுக்களில் சேர்க்கிறார்களா? இது வந்துடுச்சு வசதி

ந்தியாவில் 20 கோடி பயனாளர்களை வைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம்  கடந்த சில மாதங் களாக புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

கூகிள் ரிவெர்ஸ் இமேஜ், செய்திகளின் உண்மை நிலை அறிதல் என பல வசதிகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் நம்மை கேட்காமலேயே குழுக்களில் இணைப்பவர்களை தடுக்க புதிய வசதியினை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

அது என்ன வசதி… இதோ உங்களுக்காக….

உங்கள் அனுமதியில்லாமல் உங்களை யாரும் எந்தக்குழுவிலும் கோத்துவிட முடியாது. எனவே நீங்கள் மகிழ்ச்சியா இருக்கலாம், யாராவது குழுவில் உங்கள் கோத்துவிட்டிருந்தால் (சேர்த்து விட்டிருந்தால்) உங்களுக்கு ஒரு தகவல் வரும். அந்தக் தகவலில் குழுவின் விபரம் சொல்லி அந்தக்குழுவில் இணைய விருப்பமா என்று கேட்கும். ஆமாம் என்று கொடுத்தால் மட்டும்தான் உங்களை அந்தக்குழுவில் இணையவிடும்.

ஆனால் இந்த வசதி வேண்டுமென்றால் உங்கள் வாட்ஸ்அப் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கோங்க

அதன்பின்

உங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் – பக்கத்திற்கு செல்லுங்கள்
– அதில் Account தேர்ந்தெடுங்கள்
–அதில்  Privacy தேர்ந்தெடுங்கள்
–அதல்  Groups option என்பதை  தேர்ந்தெடுங்கள்
–: “Nobody,” “My Contacts,” or “Everyone” என மூன்று விருப்பத்தேர்வுகள் வரும், அதில் Nobody என்று தேர்வு செய்யுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்களை யாரும் எந்தக்குழுவிலும் இணைக்கமுடியாது

-செல்வமுரளி

You may have missed