கர்நாடக அரசு 15 நாட்களில் கவிழும் : பாஜக எம் பி யின் பரபரப்பு தகவல்

பெலகாவி

ர்நாடக மாநிலத்தில் இன்னும் 15 நாட்களில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து புதிய ஆட்சி அமையும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத அரசு காங்கிரஸ் ஆதரவுடன் நடந்து வருகிறது.   தற்போது இரு கட்சிகளுக்கும் இடையில் லேசாக விரிசல் உள்ளதாக கூறப்படுகிறது.   அதற்கேற்றார் போல் முன்னாள் முதல்வர் சித்தராமையா தாம் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் முதல்வராகப் போவதாக தெரிவித்தார்.   குமாரசாமியும் தாம் முதல்வர் பதவிக்காக எதுவும் செய்பவரில்லை என தெரிவித்தார்.

நேற்று பெலகாவியில் பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “காங்கிரஸ் ஆதரவுடன் மஜத வின் குமாரசாமி கர்நாடக முதல்வராக உள்ளார்.   அந்த இரு கட்சிகல் இடையே மோதல் ஆரம்பமாகி உள்ளது.   கட்டாயத் திருமணம் காலம் முழுவதும் நிலைத்திருக்காது.    அத்துடன் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் அரசின் காலை வார தயாராக உள்ளார்.

முன்பு தேவேகவுடா பிரதமரக இருந்த போது அவருக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்று துரோகம் இழைத்தது.    தற்போது அவருடைய மகனான குமாரசாமிக்கும் அத்தைகைய துரோகத்தை செய்ய காங்கிரஸ் எண்ணி உள்ளது.   இந்த கூட்டணி ஆட்சி இன்னும் 15 நாட்களில் நிச்சயம் கவிழப் போகிறது.  அதன் பிறகு மாநிலத்தில்  புதிய ஆட்சி அமையும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.