சென்னை:
மிழகத்தில் 50 சதவிகித பணியாளர்களுடன் தொழிற்சாலைகளை இயங்கலாம் என அறிவித் துள்ள நிலையில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,

  • முதல் வாரம் ஆலையின் ஒட்டுமொத்த கொள்திறனுக்கும் உற்பத்தி செய்யக்கூடாது
  • முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் மட்டுமே ஆலையை இயக்க வேண்டும்.
  • தொழிற்சாலையில் உள்ள அனைத்து உபகரணங்களும், கருவிகளும் கொள்கலன்களில் உடைப்பு ஏதேனும் கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்பே பணியை தொடங்க வேண்டும்.
  • ஒருவர் பயன்படுத்திய கருவியை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூடுதல் கருவிகளை வைத்து வேலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • குறிப்பாக ஊழியர்கள் ஆலைக்குள் நுழையும் முன்பாகவே உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.