விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அளவில் புதிய சாதனைப் படைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

சர்வசேத கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனைதான் அது..!

இன்றையப் போட்டியில் ஹோப்,‍ ஹோல்டர் மற்றும் ஜோப் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்தியா சார்பில், கபில் தேவ், சேட்டன் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன், முகமது ஷமிஇ பும்ரா உள்ளிட்டோர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனையை ஒருமுறை மட்டுமே படைத்துள்ளனர்.

ஆனால், குல்தீப் இந்தியளவில் அதை இருமுறை செய்த சாதனையாளராக மாறியுள்ளார். இச்சாதனையை செய்த உலகின் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் இவரே. முதலில் இதை செய்தது பாகிஸ்தானின் ஷாக்லைன் முஷ்டாக்.

சர்வதேச கிரிக்கெட்டில், மூன்றுமுறை ஹாட்ரிக் சாதனைப் படைத்த ஒரே பவுலர் என்ற மகுடத்தை இன்றுவரை தன்னுள் வைத்திருப்பவர் இலங்கையின் மலிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.