Random image

மேரி கோமுக்குப் புதிய கவுரவம் அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷன்!

புதுடெல்லி: பெயருக்குப் பின்னால் ‘OLY’ என்ற எழுத்துக்களைப் போட்டுக் கொள்வதற்கு தனக்கு அனுமதி அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷனுக்கு(WOA) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் 6 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம்.

அவர், தனக்கான அங்கீகாரச் சான்றிதழை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒலிம்பிக் மதிப்பீடுகளை சமூகத்தில் பிரபலப்படுத்தும் ஒரு விளையாட்டு வீரருக்கான முக்கியத்துவத்தை இந்த ‘OLY’ என்ற எழுத்துக்கள் குறிப்பிடுகிறது. மேலும், ஒரு விளையாட்டு வீரருக்கோ அல்லது வீராங்கணைக்கோ இதுவொரு கவுரவமும்கூட.

இந்த எழுத்துக்களை தனது பெயருக்குப் பின்பாக, சம்பந்தப்பட்ட வீர்ர்கள் சேர்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் மேரிகோம் மொத்தம் 6 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவர். சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமே வென்றார்-

இந்த எழுத்துக்களைப் பெயருக்குப் பின்னால் தாங்கள் பெற்ற பட்டத்தைப் போடுவதைப்போன்று, ஒருவர் போட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.