நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள  நிலையில், புதிய இன்னோவா கார் வாங்கிய நபர், தனது நண்பர்களுடன்  நகர்வலம் வந்தனர். அவர்களை மடக்கிய காவல்துறையினர், செமையாக கவனித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் பல இடங்களில் மக்கள், அரசின் உத்தரவுகளை கண்டுகொள்ளாமல், வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி புத்திமதி கூறி திருப்பிஅனுப்பி வருகின்றனர்.  பல மாநிலங்களில் செமத்தையா நான்கு சாத்து சாத்தி அனுப்பி விடுகின்றனர்..

அதுபோல ஒரு சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் புதிய வாங்கிய இன்னோவா காருடன், தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சாலையில் நகர்வலம் வந்தார். இந்த காரை மடக்கிய தெலுங்கானா காவல்துறையினர், காரினுள் இருந்தவர்களை இறக்கி, செமத்தையாக தடியால் நான்கு விளாசு விளாசினர்…

விசாரணையில், அந்த கார்,  தெலுங்கான மாநிலத்தில் ஹைடெக் நகரமான ஐதராபாத்  அருகில் உள்ள குகட்பள்ளி என்று சரகத்தை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது..