சென்னை:

மிழக அரசு  ரத்த வங்கிகளில் ரத்தத்தின் வெப்பநிலையை அறிய புதிய கருவி பொருத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தமிழகத்தில் உள்ள 89 அரசு ரத்த வங்கிகளை புதிய கருவிகள் மூலம் மேம்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுவரை ரத்தத்தின் வெப்பநிலையை கைகளால் பார்த்து அளவிடும் நிலை நீடித்து வந்த நிலையில், அதை மாற்றி, புதிய கருவி மூலம் வெப்பநிலையை அளவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக சுகாதாரத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது..