சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி நியமனம்: விரைவில் பதவி ஏற்பு!

--

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக  ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சத்ருகன் புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் நிலையில், ஒடிசாவை சேர்ந்த சத்ருகன் புஜாஹரி சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54-க உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  சத்ருகன புஜாஹரி வரும் 20-ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 53 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எற்கனவே 6 புதிய நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், தற்போது ஒடிசா ஐகோர்ட்டு நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.