நிவின் பாலியுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

மிழ் மற்றும் தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கேரள டாப் ஸ்டார் நிவின் பாலியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் 2018ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா உலகில் தனக்கென தனி பாதையை அமைத்து வருபவர் நடிகர் நிவின் பாலி. தற்போது மலையாள சினிமாவின் டாப் நடிகராக இருக்கிறார்.  தட்டத்தின் மறையத்து என்ற நிவின் பாலியின் படம் 5 வருடங்களை கடந்து மலையாள திரையுலகில் சாதனை படைத்து வருகிறது.

இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபதில்  விழா நடைபெற்றது.  இந்த விழாவில் நிவின் பாலியுடன் நயன்தாராவும் கலந்துகொண்டார்.

விழாவில், நிவின் பாலி தன் அடுத்த படம் பற்றி பேசினார். அதில் தன்னுடன் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறினார்.

வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதில் நயன்தாரா தான் ஹீரோயின் என அவர் கூறினார்.

வினித் ஸ்ரீநிவாசன்  இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள நிவின் பாலியின்  சூப்பர்ஹிட் படங்களான  ஓம் சாந்தி ஓஷானா படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான் இந்த படத்துக்கும் இசை அமைக்கிறார். மற்றும் அஜு வர்கீஸ் மற்றும் விஷக் சுப்ரமணியம் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது.

இந்த படம் 2018 ம் ஆண்டு  வெளிவரும் என்று கூறப்படுகிறது.