இரு உள்ளங்கள் இணைந்து புது வம்சங்களைப் பெருக்கும், இனிய நிகழ்வு திருமணம். நூறு நூறாண்டுகள் தழைக்கும் பந்தம் இது.
அதே நேரம் தற்போதைய காலச் சூழலில், தகுந்த மணக்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அருகருகே உறவுகள் வாழ்ந்தாலும் அறிய முடியாத காலச்சூழல்.

இந்த நிலையில்தான் மேட்ரிமோனியல் தளங்கள், திருமண பந்தங்கள் ஏற்பட மிகவும் உறுதுணையாக உள்ளன.
அப்படி உருவாகி இன்று வன்னிய சொந்தங்கள் வாழ்க்கையில் இணைய பேருதவியாக இருக்கிறது எக்ஸிகூட்டிவ் மேட்ரிமோனியர் சர்வீஸஸ் (Executive matrimonial services) நிறுவனம்.

இது குறித்து இந்நிறுவனத்தை உருவாக்கிய டி.என்.சி இளங்கோவன் சொல்கிறார்:
“வன்னிய சொந்தங்கள் இன்று மிகச் சிறப்பாக படித்து பல்வேறு உயர் துறையில் பொறுப்பு வகிக்கிறார்கள். உயர் கல்வியாளர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்று பல்துறைகளில் கோலோச்சுகிறார்கள். அவர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாடு கடந்து ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களிலும் இவை தவிர கடல் கடந்தும் தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு , மொரிஷியஸ், இலங்கை, லத்தீன், துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்து தொழில், படிப்பு வேலைவாய்ப்புகள் மூலம் வன்னியர்கள் வசித்து வருகின்றார்கள். இன்னமும் கிராமங்களில் வாழும் நிலச்சுவான்தாரர்களும் உண்டு.

வன்னிய மக்கள் வன்னியகவுண்டர், நாயகர், படையாட்சி, அக்னிகுலஷத்திரியர், சம்புவராயர், தென்னவராயர், ரெட்டியார், மழவரையாயர் போன்ற 115க்கும் மேற்பட்ட பிரிவுகள் பட்டப்பெயர்களுடன் உலகெங்கும் வசித்து வருகின்றார்கள்.
கிராமங்களில் வாழ்ந்தாலும் சரி, அமெரிக்காவில் கணினி நிபுணர்களாக இருந்தாலும் சரி… தங்கள் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காத – பழந்தமிழ்ப் பண்பாட்டை விட்டு விலகாத மனிதர்களாக அவர்கள் வாழ்கிறார்கள். சொந்தங்களுக்குள் திருமண பந்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரம் இவர்களுக்கிடையே – இன்று எல்லோரையும்போல – தொடர்புகள் என்பது அருகி வருகிறது. ஆம்.. தகவல் தொடர்பு பெருகிய இந்தக் காலத்தில் தனிமனித தொடர்புகள் அருகி வருகின்றன என்பது உண்மைதானே. அதாவது, தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முயலும்போது, அவர்களையொத்த நிலையில் இருக்கும் பிற குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் படிப்பு, வருமானம், இருப்பிட விலாசம் போன்றவற்றை பெறுவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது.
இப்படி சொந்தங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப் போக்கி, திருமண பந்தத்தில் இணைய உதவும் நோக்கத்தோடு எங்கள் திருமண தகவல் மையத்தை – மேட்ரிமோனியலை – உருவாக்கியிருக்கிறோம்.

வன்னிய சொந்தங்களுக்கு… தாய்மாமன் போல ஒரு மேட்ரிமோனியல்..!
ஏற்கெனவே பல திருமண அமைப்பாளர்கள் இருக்கும்போது, புதிதாக ஏன் என்று சிலர் நினைக்கக்கூடும்.

எங்களது முக்கிய நோக்கம், திருமணம் என்பதை நம் முன்னோர்கள் செய்ததைப்போல நடத்துவது. அதாவது தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண் வரன்கள் தேடும் நிகழ்வாகவே இன்று நடைபெற்று வருகின்றது. முற்காலத்தில் உறவினர்கள் அப்பா, அம்மா பார்த்து முடிவு செய்யும் திருமணங்கள் மற்றும் தாய்மாமன் மூலம் வரன்தேடும் உறவுகள் என்றும் நடைபெற்று வந்தன. பிறகு தரகர்கள் மூலம் திருண பந்தங்கள் ஏற்பட்டன. இதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
பொருத்தமற்ற வரன்கள், ஜாதகம் ஒத்துப்போகாதது, தகவல் தொடர்பில் இடைவெளி.. இப்படி நிறைய பிரச்சினைகள்.
பிறகு வந்த மேட்ரிமோனியல் நிறுவனங்களிலும் இதே நிலைதான்.

இந்த நிலையைப் போக்கி.. அந்தக் காலத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தாய்மாமன் எப்படி அக்கறையோடு வரன் தேடுவாரோ.. அது போன்ற உணர்வுடன் நாங்கள் செயல்படுகிறோம். இதைத்தான் பழங்கால முறை போல என்று கூறினேன்.
நமது அமைப்பு பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வன்னிய சொந்தங்களுக்கான சேவை செய் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில், வன்னிய சொந்தங்களுக்காக மட்டுமே, “கல்யாண மாலை” போன்ற நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.
இதற்காக திட்டமிடும் முதல் கூட்டம் கடந்த 3.12.2017 தேதி அன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

அதற்காகத்தான் இந்த இ.எம்.எஸ். திருமண தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்மாமனாக, சித்தப்பாவாக நினைத்து வன்னியசொந்தங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என்று நெகிழ்ச்சியாக பேசி முடித்தார் இளங்கோவன்.
தொடர்புக்கு…

டி.என்.சி. இளங்கோவன், (இணை நிறுவனர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்)
எம். போஜ்ராஜ் வர்மா

முகவரி:
டி.என்.சி.சிட் பில்டிங்ஸ், 11/6 ஏ, பி.டி. ராஜன் சாலை, 20வது அவென்யு, கே.கே.நகர், சென்னை 600078

கைபேசி: 7397794568
மின்னஞ்சல்: executive.matrimonial@gmail.com