டில்லி:

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக  ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்து உள்ளார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த  ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதற்கு பல நாடுகளும் வரவேற்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர்,  ஹமீது கர்சாய்  கூறியுள்ளதாவது,‘

இந்திய அரசாங்கத்தின் “புதிய நடவடிக்கைகள்” இந்திய குடிமக்களாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,  தீவிரவாத வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டதாகவும்  தெரிவித்து உள்ளார்.

ஹமீது கர்சாய் கடந்த 2001-2014 முதல் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.