ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்தியாவின் கணக்கில் ஏறும் பதக்கங்கள்!

புதுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அஷு, ஆதித்யா மற்றும் ஹர்தீப் சிங் ஆகியோர் வெவ்வேறு எடைப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மூவருமே கிரிகோ-ரோமன் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் தற்போது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் 67 கிகி எடைப்பிரிவில் இந்திய வீரர் அஷு சிரிய வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

மற்றொரு போட்டியில் 72 கி‍கி எடைப்பிரிவில் இந்தியாவின் ஆதித்யா ஜப்பான் வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 97 கிகி எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங், கிர்கிசிஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலம் வ‍ென்றார்.

இதேப் பிரிவில், ஏற்கனவே இந்தியாவின் சுனில் குமார் 87 கிகி எடைப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.