லிஃபோர்னியா

குடல் புண்களை குணப்படுத்தும் மருந்துகளை நானோ ரோபோ மூலம் உடலினுள் செலுத்தலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அல்சர் என்றாலே மருத்துவர்கள் சொல்வது நோ ஹரி, நோ ஒரி, நோ கரி என்பதே.   அதாவது பரப்பரப்பாக வேலை செய்து சாப்பிட மறப்பது, அல்லது கவலை காரணமாக சாப்பாட்டை புறக்கணிப்பது மற்றும் மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆகியவைகளை தவிர்த்தால் நிச்சயம் அல்சர் வராது என்ப்தே பொருள்.

தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அல்சர் எனப்படும் குடல் புண்களை குணப்படுத்த உதவும் நானோ என்னும் மிகச் சிறிய ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.  அளவில் மிகவும் சிறியவை இந்த ரோபோக்கள்.  சரியாகச் சொன்னால் ஒரு மனிதனின் தலைமுடியைப் போல ஒன்றரை மடங்கு தடிமன் உள்ளவை.  இவை அல்சரை குணப்படுத்தும் மருந்துகளை உடலினுள் எடுத்துச் செல்லும்.  ஐந்தே நாட்களில் இந்த ரோபோ மூலம் மருந்தை உடலினுள் செலுத்தி அல்சரின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   இந்த சோதனையில் எலிகளை பயன்படுத்தி முழு வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.