அமைச்சராக பதவியேற்க இருக்கும் 9 பேர் மோடியிடம் ஆலோசனை பெற்றனர்

--

டில்லி :

த்தியில் பா.ஜ., அரசு பதவியேற்ற பிறகு   இன்று(செப்.,03) மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கிறது.  இதில் காலியாக உள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட  இருக்கிறார்கள்.

 

இன்று மாற்றி அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் 9 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கு  ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

இவர்கள்   பதவியேற்க செல்வதற்கு முன் பிரதமர் மோடியையும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவையும் இன்று காலை சந்தித்து ஆலோசனை பெற்றனர்.

 

சத்ய பால் சிங், ஹர்தீப் புரி, கே.ஜெ.அல்போன்ஸ், ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் புதிதாக இணையமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பதவியேற்பு விழா முடிந்ததும், பிரதமர் மோடி விருந்தளிக்க இருக்கிறார்.

நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அபாஸ் நஹ்வி ஆகிய 4 பேரும் மத்திய இணையமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன