கட்டுமான தொழிலாளர்களுக்கு புதியதாக அமைச்சகத்தை உருவாக்க கோரிக்கை: பிரதமருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு புதியதாக அமைச்சகத்தை உருவாக்க கோரி பிரதமர் மோடிக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக, அதிக தொழிலாளர்களை கொண்டது கட்டுமான தொழிலாளிகள் தான். நாட்டின் 60 சதவீதம் முதலீட்டில் கட்டுமான தொழிலின் பங்களிப்பு  முக்கியமாக உள்ளது.

கட்டுமான தொழிலின் வளர்ச்சியை முன் வைத்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு புதியதாக அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தங்களது கோரிக்கைகள் குறித்து கலாநிதி வீராசாமியை சந்தித்து கட்டுமான தொழிலாளர்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.