புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு!  இந்தியாவில் கண்டுபிடிப்பு

ராய்ப்பூர்:

புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு  இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் மம்தா திரிபாதி. மருத்துவ ஆராய்ச்சியாளரான இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோய் செல்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். . அவர் தனது ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட புதிய மூலக்கூறை கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா திரிபாதி செய்தியாளர்களிடம் பேசியபோது,  “புற்றுநோயை குணப்படுத்த உதவும் புதிய மூலக்கூறை கண்டுபிடித்திருக்கிறேன்.  இந்த மூலக்கூறு, புற்றுநோய் செல்களை 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அழிக்கும் தன்மை உள்ளது. பலவித சோதனைகள் மூலம் இது உறுதியாகி உள்ளது. அடுத்து, இதனை எலி போன்ற சிறிய உயிரினங்களில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பிறகு மனிதர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.

இந்த ஆராய்ச்சியை செய்து முடிக்க 5 வருடங்கள் ஆனது.

இந்த மூலக்கூறு பரிசோதனை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், கீமோதெரபிக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், எங்கள் ஆராய்ச்சி சரியான கோணத்தில் செல்லும்பட்சத்தில் இது சாத்தியம் ஆகலாம். அப்படி சாத்தியமானால்  கீமோதெரபியைவிட சிறப்பாக இந்த முறை இருக்கும்” என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: New molecule that destroys cancer cells is Discover in India, புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு!  இந்தியாவில் கண்டுபிடிப்பு
-=-