அமித்ஷா வருகை பாஜகவுக்கு அமாவாசை: திருநாவுக்கரசர்
சென்னை:
தமிழக பாஜகவினரை சந்திக்க இன்று அமித்ஷா சென்னை வருகிறார். அவரது வருகை பாஜகவுக்கு அமாவாசையாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டு இரண்டு முறை அவரது தமிழக பயணம் ரத்து செய் யப்பட்ட நிலையில், தற்போது சென்னை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அமித்ஷா சென்னை வருகையால் விடியல் எதுவும் ஏற்பட போவதில்லை; பாஜகவுக்கு அமாவாசையாகதான் இருக்கும் என்று கூறினார்.
அமித்ஷாவின் 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்ற திருநாவுக்கரசர், பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா செய்யப்பட உள்ள நிலையில், மற்ற கட்சிகளின் கருத்து மற்றும் திருத்தங்கள் செய்து லோக் ஆயுக்தாவை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.