பவர்ஸ்டார் நடிக்கும் புதிய படம்

ம்.எப். கிரியோசன்ஸ்  நிறுவனத்தின்     கார்த்திக் ராஜ் மற்றும் சதீஸ்   இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வட்டகரா.’

சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய் மூவரும் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தை கே..பாரதி கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

அந்தமானில் பல குறும் படங்களை எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ளவர் பாரதிகண்ணன்.

புதுமுகங்களுடன் முக்கிய வேடத்தில்   பவர் ஸ்டார் நடிக்கறார்.,

இத்திரைப்படத்தின் பூஜை  பிரசாத் லேபில் நடைபெற்றது.

பற்றி இயக்குநர் கே.பாரதி கண்ணன் பேசுகையில், “நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கதைத் கருவாகக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் செலவிட்டு இதற்கான திரைக்கதையை அமைத்திருக்கிறேன். கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள்  தேர்வு செய்து,  டு, அவர்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக பயிற்சி அளித்து, டு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்தின் கதை மட்டுமல்லாமல்   தலைப்பும் தனித்துவம் உடையாதாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் ‘வட்டகரா’ என்ற தலைப்பு வைத்திருக்கிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  மக்கள் பயன்படுத்திய வழக்கு மொழிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பதை பல முறை பரீசிலனை செய்த பிறகே இத்தலைப்பு வைத்தோம்” என்றார்.