நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் மசோதா! நிறைவேறுமா…..?

டில்லி:

க்களவையில் முத்தலாக் மசோதா கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்ட நிலை யில், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை ஆளுங்கட்சி எம்.பி.க்களை விட அதிக அளவில் இருப்பதால், மசோதா  நிறைவேறுவது சந்தேகமே.

ஏற்கனவே கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய முத்தலாக் மசோதாக மீண்டும் கடந்த 17ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிகளுக்கு இடையே இந்த மசோதா காங்கிரஸ், அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் கடந்த 27ந்தேதி நிறைவேறியது.

இந்த நிலையில், புதிய முத்தலாக் மசோதா  நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படு கிறது. ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மேகதாது, ரஃபேல் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், நாளை மாநிலங்களவையில்  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார்.

ஆனால், மசோதாவை நிறைவேற்ற முடியாதவாறு காங்கிரஸ், அதிமுக உள்பட பல எதிர்க்கட்சி கள் திட்டமிட்டு வருகின்றன. ஆனால், மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முத்தலாக் மசோதா நிறைவேறுமா? அல்லது கடந்த முறைபோன்றே திருப்பி அனுப்பப்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.

கார்ட்டூன் கேலரி