புதிய முத்தலாக் மசோதா: மத்திய அமைச்சர் ரவிசங்கர் மக்களவையில் தாக்கல்

டில்லி:

பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளி நிலவி வரும் நிலையில், திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கரால் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே முத்தலாக் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலை யில், மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேறாமல் முடங்கியது. இந்த நிலையில், இன்று புதிய முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற இரு அவைகளிலும், ரஃபேல், மேகதாது உள்பட பல்வேறு பிரச்சினை கள் குறித்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த அமளிகளுக்கு இடையே  முத்தலாக்குக்கு, மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப் படக்கூடிய குற்றமாக கருதப்படும் வகையில் திருத்தப்பட்ட புதிய மசோதா  இனறு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களின் மதநம்பிக்கை மற்றும் மதம்சார்ந்த பழக்க வழக்கங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவற்றை தடை செய்யும் வகையில் இதுபோன்ற மசோதாக்களை தாக்கல் செய்யும் வலிமை இந்த அரசுக்கு இல்லை என்றார்.

மேலும்,  அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 16 பிரிவுகளை மீறும் வகையில் முத்த லாக் மசோதா உள்ளதால், அதை  ஏற்க முடியாது என்றும் கூறினார்.

அப்போது இடைமறித்து பேசிய அமைச்சர் ரவிசங்கர்,  முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதால்தான், அதற்கான தடை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்ததாகவும், சிறிய பிரச்ச னைகளைகூட காரணமாக காட்டி வாட்ஸ்அப் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறைகளை தடுக்கும் வகையில், இதுபோன்ற மசோதா தேவைப்படுவது அவசியம் என்றும் கூறினார்.

கடும் அமளிக்கு இடையே மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம்  தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.