உள்நாட்டு விமான பயணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதி முறைகள்

டில்லி

ரும் மே மாதம் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்க உள்ளதால் அது குறித்து புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு 4.0 அமலில் உள்ள நிலையில் உள்நாட்டுப் பயணிகள் விமானம் வரும் 25ஆம் தேதி முதல்  இயக்கப்பட உள்ளன.  இதையொட்டி மத்திய விமான பயணத்துறை பல விதிமுறைகளை அறிவித்துள்ளது.   அனைத்து பயணிகளும் விமான புறப்பாட்டு நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாக விமான நிலையம் வர வேண்டும் எனவும் இணையம் மூலம் செக் இன் செய்தவர் மட்டுமே  முனையக் கட்டிடத்துக்குள் நுழைய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணத்துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் பின் வருமாறு

வீட்டிலிருந்து விமான நிலையம்

 • புது விதிமுறைகள், குறிப்பாக சமூக இடைவெளி, லக்கேஜ் அளவு, டிஜிடல் பரிவர்தனை உள்ளிடவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
 • தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்போர் பயணம் செய்ய வேண்டாம்
 • ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்
 • கடைசி நிமிடத்தில் விமான நிலையம் செல்லாமல் 2 மை நேரம் முன்னதாக விமானநிலையத்துக்குள் செல்லுங்கள்
 • இணைய செக்இன மூலம் போர்டிங் பாஸ் பெறுவது கட்டாயமாகும்.
 • உங்களது பைகளில் பேக்கேஜ் டாகை சரியாக பிரிண்ட் செய்து ஒட்டவும்.  பிரிண்ட் செய்ய முடியவில்லை என்றால் பி என் ஆர் எண் மற்றும் பயணியின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி பையில் ஒட்டவும்.
 • பாக்கேஜ் டாக் தரவிறக்கம் செய்யும் போது குறியீட்டு எண்ணைக் கவனம் கொள்ளவும்.
 • விமான நிலையத்தினுள் தொற்றைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்.

தற்போது ஒரு பேக்கேஜ் மற்றும் கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  டிராலிகள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் குறைவான சாமான்களை எடுத்துச்செல்லவும்.

பயணிகள் தங்கள் விவரங்களை அறிவித்த  பிறகே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே டிக்கட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர் பயணம் செய்தால் அனைவரது விவரங்களும் அறிவிக்க வேண்டும்

விமான நிலையம் சென்றதும் செய்ய வேண்டியவை

 • விமான நிலையத்துக்குள் நுழையும் முன்பு தடுப்பு பொருட்கள் முழுமையாக எடுத்து வந்துள்ளீர்களா என்பதைச் சோதித்துக் கொள்ளவும்
 • பயணம் முழுவதும் முகக் கவசம் அணிவது அவசியமாகும்.
 • நுழைவாயிலின் அருகில் உள்ள தெர்மல் ஸ்கீரீனிங் வழியாக நுழையவும்
 • உங்கள் உடல் வெப்பத்தைச் சோதித்துக் கொள்ளவும். ஆரோக்ய சேது மூலம் உங்கள் உடல் நிலை விவரத்தை அளிக்கவும்.
 • இதற்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு உண்டு
 • ஸ்கிரீனிங் முடிந்ததும் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் தங்களது போர்டிங் பாஸ், அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டி விட்டு உள்ளே செலவும்.
 • லக்கேஜுகள் அளிக்கும் இடத்தில் உங்களுடைய லக்கேஜுகளை பி என் ஆர் எண் அடையாளத்துடன் அளிக்கவும்.  இதைப் பெற்றுக்கொண்ட சீட்டு உங்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் அனுப்பப்படும்.
 • மேற்கொண்ட அனைத்தையும் விமானம் கிளம்பும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே முடித்து விட வேண்டும்.

பாதுகாப்பு சோதனைகள்

 • பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடம் செல்ல அளிக்கப்பட்டுள்ள பாதை வழியாகச் செல்லவும்.
 • பயணிகளைக் குறைவாகத் தொடுதல் என்பதன் மூலம் பாதுகாப்பு ஊழியர் உங்களைச் சோதனை செய்வார்.
 • சோதனை மையம் செல்லும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.  சானிடைசர் பயன்பாடு அவசியம்.  உபயோகப் படுத்தக் கூடாது என எழுதப்பட்டுள்ள நாற்காலிகளில் அமரக்கூடாது.
 • விமானம் ஏறும் முன்பு மூன்றடுக்கு முகக் கவசம், முக மூடி, சானிடைசர் ஆகியவை வழக்கபப்டும்.
 • விமானம் கிளம்புவதற்கு 60 நிமிடம் முன்பு விமானத்தில் ஏறி விட வேண்டும்.  விமானம் ஏறும் வாயில் கிளம்புவதற்கு 20 நிமிடம் முன்பு மூடப்படும்
 • உங்களது போர்டிங் பாஸை நீங்களே ஸ்கான் செய்யவும்.
 • விமான நுழைவாயிலில் உள்ள ஊழியரிடம் உங்கள் அடையாள அட்டையைக் காட்டி விட்டு விமானத்தினுள் செல்லவும்.

விமானத்தினுள் என்ன செய்ய வேண்டும்

 • சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.  யாருடைய முகத்துக்கு அருகிலும் சென்று பேசக் கூடாது.
 • கழிப்பறை பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும்.   தேவையற்ற நடமாடத்தை தவிர்க்கவும்
 • குழந்தைகள் மற்றும் முதியோருடன் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்
 • விமானத்தினுள் உணவு அளிக்கப்பட மாட்டாது.  தண்ணீர் பாட்டில்கள் இருக்கையில் அல்லது நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும்.
 • விமான பயணத்தின் போது எதையும் சாப்பிட அனுமதி இல்லை.
 • செய்தித்தாள் அல்லது பத்திரிகை அளிக்கப்பட மாட்டாது.
 • விமானத்தினுள் எதுவும் விற்கப்படமாட்டாது.
 • உங்களுக்கு மயக்கம், அசவுகரியம், இருமல் இருந்தால் பணியாளர்களுக்குத் தெரிவிக்கவும்.

விமான பயணம் முடிந்ததும் செய்ய வேண்டியவை

 • விதிமுறைகளைப் பின்பற்றவும்.   வெளியேறும் வாயிலை நோக்கி ஓட வேண்டாம்.
 • சமூக இடைவெளியுடன் விமானத்தை விட்டு வெளியேறவும்.
 • லக்கேஜுகள் வரும் இடத்தில் இடைவெளி விட்டு நின்று லக்கேஜை எடுத்துக் கொள்ளவும்.
 • பயணம் செய்வோர் அந்த பகுதியை விட்டு வெளியேற அனுமதி இல்லை

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் முறை

 • அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள டாக்சிகள் மூலம் முறையான சுகாதார பாதுகாப்புடன் செல்லவும்.
 • சமூக இடைவெளியைத் தொடர்ந்து பின்பற்றவும்.