தமிழிலேயே புதிய ஓடிடி தளம் வரவு.. தியேட்டர் பக்கம் போக விடமாட்டாங்க போல..

சேட்டிலைட் சேனல்கள், ஸ்மார் போன்கள், மொபைல் ஆப்கள் போலவே ஓடிடி தளங்களும் இனி நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் விசயமாகவே மாறி வருகிறது. தமிழின் முக்கிய நடிகர்களின் படங்களே திரையரங்கம் தவிர்த்து நேரடியாக இந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி மக்களின் வரவேற்பறையை நேரடியாக சென்றடையும் நிலை சகஜமாகி வருகிறது.

அந்த வகையில், Flixdaa எனும் புதிய ஓடிடி தளம் ஒன்று தமிழிலேயே துவங்கப்பட்டு நம்மை மகிழ்விக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் ஏராளமான தமிழ் வீடியோக்களுடன் உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், குறு நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என பல்வேறு வகைகளில் கணக்கிலடங்கா வீடியோக்கள் கிடைக்கின்றன.

இணையத்தின் எந்த ஒரு இயங்குதளத்தின் மூலமும் www.flixdaa.com முகவரி வழியே இந்த தளத்தை காணலாம். அல்லது மொபைல் வழியே ஆண்ட்ராய்ட் ஆப் மற்றும் தொலைக்காட்சி/ Amazon Fire Tv ஆப் மூலமும் காணலாம்.

முற்றிலும் புதுமையான வகையில் பதிவேற்றம் செய்யப்படும் இந்த புதிய தளம் உலகம் முழுதுமான இந்திய ரசிகர்கர்களுக்கும், நமது கலைஞர்களுக்கும் ஏற்றதொரு தளமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது முடக்கம் இன்னமும் முடிவுக்கு வராத இந்த சூழலில் ஏற்கெனவே பார்த்த திரைப்படங்கள், சீரியல்கள் என நொந்து போன தமிழ் ரசிகர்களுக்கு இப்புதிய தளம் மிகவும் உற்சாகமூட்டும் வண்ணம் பல தினுசுகளில் புதிய கதைகள், புதிய தமிழ் தொடர்கள், திரைப்படங்கள், புதிய நிகழ்ச்சிகள் என்று அனைத்துமே ப்ரத்யேகமாக கிடைக்க கூடியவைகளாக இருக்கும். ஸ்மார்ட் போன் ஆப்களின் மூலம் பார்க்கும் ஓடிடி தளங்களில் இது நிச்சயமாக வித்தியாசமான பொழுதுபோக்கு தளமாக இருக்கும் என்கின்றனர்.

– லெட்சுமி பிரியா

You may have missed