புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்றும் மழை….?

அந்தமான்,

ந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் இன்ற பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் ஆனால்,  இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டது.

rain1

இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்தனர். ஏற்கனவே காவிரி பிரச்சினை காரணமாக காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லை தற்போது இயற்கையும் வஞ்சித்து வருவதால் என்ன செய்வது  என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, நாடா புயலாக மாறியது.

இதனால் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. தற்போது  மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஸ்டெல்லா கூறியதாவது:-

உள்தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

1rain

நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்ட களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்தோனேசியா வின் சுமத்ரா தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. இந்த மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்படும்.

மேலும் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள மேல டுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்ட லமாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

இந்த மேலடுக்கு சுழற்றி தற்போது தமி ழகத்தில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாகவும், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.