பத்துமலை முருகன் கோயில் படிக்கட்டுகளுக்கு புதிய வர்ணம்: மலேசிய அரசு கண்டனம்

கோலாலம்பூர்:

லகப் புகழ்பெற்ற மலேசியா பத்துமலை முருகன் கோயில் படிக்கட்டுகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளத. கலர்கலராக வர்ணம்  பூசப்பட்டதால் பாரம்பரிய மிக்க முருகன் கோவில் தனத பாரம்பரியத்தை இழந்து விட்டதாக மலேசிய அரசு கூறி உள்ளது.

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பிடித்தமான கோவில்களில் பத்துமலை முருகன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்  உலகிலேயே மிக உயரமான  140 அடி முருகன் சிலை உள்ளது.  இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

குகைக் கோயிலான இந்த கோவிலில் அமைந்து மூலவரை தரிசிக்க  272 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அதன்பிறகே முருகனை தரிசிக்க முடியும்.  இந்த கோவிலின் கும்பாபிஷேககம் காரணமாக கோயில் நிர்வாகம் படிகளுக்கு பளீரென்ற கலைடாஸ் கோப் வர்ணம் எனப்படும் பல வர்ணங்களில் வர்ணம் பூசி உள்ளது.  இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாரம்பரியம் மிக்க கோவிலில் வர்ணம் பூசுவதற்காக மலேசியா கலாசாரத்துறை அமைச்சகத்திடம் கோயில் நிர்வாகம் அனுமதி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. அதைத்தொடர்ந்து,   மலேசிய கலாசாரத்துறை அமைச்சகம் பத்துமலை முருகன் கோயில் நிர்வாகத்துக்கு  நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

அந்த நோட்டீசில்,  கோயில் நிர்வாகத்தின் செயல்பாடு எங்களை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியுள்ளது. புதிய வர்ணம் பூசியதால் கோயில் இயற்கைத் தன்மையை இழந்துள்ளது. ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட இந்த நாட்டில் தன்னிச்சையாக கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது சரியானது அல்ல. பாரம்பரியயமான கோயில்கள், மசூதிகள், ஆலயங்கள் முக்கியமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கண்டிப்பாக முறையான அனுமதி வெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.