புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் காணாமல் போவார்கள்: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை:

புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் காணாமல் போவார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.

இன்று சசிகலா சகோதரர் புதிய கட்சி தொடங்கி உள்ள நிலையில் செய்தியாளர்கள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், புதியதாக கட்சி தொடங்கி உள்ள ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள் என்று கூறினார்.

புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போவார்கள். அதற்கு திவாகரன், தினகரன், ரஜினி, கமல் என யாரும் விதிவிலக்கல்ல என கமலையும், ரஜினிகாந்தையும் விமர்சித்து பேசினார்.  நடிகர் கமல் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே தினமும் அரசு பற்றி எதையோ பேசி வருகிறார் எனவும் விமர்சித்தார்.

இன்று மன்னார்குடியில், சசிகலா சகோதரர் திவாகரன் திடீரென அண்ணா திராவிடர் கழகம்  தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.