மும்பை

ந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இன்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   இந்த ஊதியம் வீரர்களின் ஆட்டத் திறன் மற்றும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.    இதில் ஆடவர் அணியில் ஒரு புதிய பிரிவை உண்டாக்கி அதில் இடம் பெறும் வீரர்களுக்கு அதிக ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஊதியம் பெரும் வரிசையில் முன்பு இருந்த தோனி, அஸ்வின் போன்றோர் இரண்டாம் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   மற்றும் கடந்த முறை நீக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.   தற்போது மனைவியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ள முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.   ஆடவர் அணிக்கு கிரேட் ஏ+ எனும் புதிய பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளது.   அனைத்து பிரிவிலும் முன்பிருந்ததைப் போல் 200% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது கிரேட் ஏ+ பிரிவு வீரர்களுக்கு ரூ. 7 கோடி, கிரேட் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடி, கிரேட் பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி மற்றும் கிரேட் ச் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 1 கோடி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்த விகிதம் படி ஒவ்வொரு பிரிவிலும் கீழ்க்கண்ட வீரர்கள் உள்ளனர்.

கிரேட் ‘ஏ+’ பிரிவு:

விராட்கோலி
ரோஹித்ஷர்மா
ஷிகர்தவன்
புவனேஸ்வர்குமார்
ஜஸ்ப்ரீத்பும்ராட்
ஷிகர்தவன்
புவனேஸ்வர்குமார்
ஜஸ்ப்ரீத் பும்ரா

கிரேட் ‘ஏ’ பிரிவு:

அஸ்வின்
ரவீந்திரஜடேஜா
முரளிவிஜய்
செத்தேஷ்வர்புஜாரா
அஜிங்க்யரஹானே
மகேந்திரசிங்தோனி
ரித்திமான் சாஹா

கிரேட் ‘பி’ பிரிவு:

கே.எல்.ராகுல்
உமேஷ் யாதவ்
குல்தீப் யாதவ்
யசுவேந்திர சாஹல்
ஹார்திக் பாண்டியா
இஷாந்த் ஷர்மா
தினேஷ் கார்த்திக்

கிரேட் ‘சி’ பிரிவு:

கேதர் ஜாதவ்
மணீஷ் பாண்டே
அக்ஷர் படேல்
கருண் நாயர்
சுரேஷ் ரெய்னா
பார்தீவ் படேல்
ஜெயந்த் யாதவ்