2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை புதிய மனு!

டெல்லி: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில்,  சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2ஜிவழக்கில் சிபிஐ சிறப்புநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பிரஜேஷ்சேத்தி அமர்வு முன் நடை பெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர், இந்த வழக்கை விரைவாக விசாரித்துமுடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், நீதிபதியோ, இந்த மனுக்கள், அதிகாரப்பூர்வமாக இன்னும் வழக்கு பட்டியலில் பதிவேற்றபடவில்லை என்றும், இந்த வழக்கில் சொத்துக்களை விடுவிக்க கோரிய மனு மீது விளக்கம் அளிக்க வழக்கறிஞர் விஜய்அகர்வாலுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.