ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த கிரகம் நமது சோலார் சிஸ்டத்திற்கு வெளியே அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. k2-18b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள் பூமியைவிட 8 மடங்கு பெரியது.

வாழ்வதற்கு சாத்தியமுள்ள வகையில் தண்ணீர் மற்றும் தட்பவெட்பநிலை கொண்டாத கண்டறியப்பட்டுள்ள முதல் வெளிக்கோள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோள் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாய் கூறப்படுகிறது. லியோ விண்மீன் கூட்டத்தில் அந்த கோள் அமைந்துள்ளதாயும் கூறப்படுகிறது.

விண்மீன் திரள் பகுதியிலே, இந்த வகையில் கண்டறியப்பட்ட முதல் கண்டுபிடிப்பாகும் இது. தண்ணீர் திரவ நிலையில் கிடைக்கக்கூடிய தொலைவில் இது அமைந்துள்ளது. பூமிக்கு வெளியே தண்ணீர் மற்றும் வாழக்கூடிய தட்பவெட்ப நிலையுடன் ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளதானது மிகவும் ஆச்சர்யம் தரக்கூடியது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இந்த கோள் பூமியின் இன்னொரு வடிவம் கிடையாது. இது பூமியைவிட அதிக எடை கொண்டது மற்றும் புதிய சூழல் தன்மையைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.