டில்லி:

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (இன்று)‌ பொறுப்பேற்கிறார்.

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பாரதியஜனதாவை சேர்ந்த ராம்நாத்கோவிந்த் இன்று புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தமிழக முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்து கட்சி எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உள்பட முக்கிய பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ள‌னர்.

விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.