இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த புதிய இளவரசர்: வைரலாகும் புகைப்படம்

ங்கிலாந்து அரச குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள குட்டி இளவரசருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் குட்டி இளவரசரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு 3வது குழந்தையாக நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அரச குடும்பத்தின் புதுவரவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குட்டி இளவரசருக்கு  உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிறந்துள்ள குட்டி  இளவரசரின் புகைப்படம் இணைய தளத்திலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வில்லியம் – மிடில்டன் தம்பதிக்கு ஏற்கனவே, 4 வயதில் ஜார்ஜ் என்ற மகனும், 2 வயதில் சார்லட் என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி இளவரசர் வருகைக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா, பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜேரேமி, லண்டன் மேயர் சாதிக்கான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.