உச்சநீதி மன்றத்தில் புதியநடைமுறை: இனி பொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும்

டில்லி:

டுத்த மாதம் முதல் உச்சநீதி மன்றத்தில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகள் இனிமேல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மட்டுமே விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்றத்திற்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூலை 2ந்தேதி விடுமுறைக்கு பிறகு உச்சநீதி மன்றம் மீண்டும்  எப்போதும்போல செயல்பாட்டு வரும். அன்றைய தினம் முதல் புதிய  நடைமுறை அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, இனிமேல், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்படும்  அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோ, அல்லது அவரது தலைமையிலான அமர்வு மட்டுமே விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் முக்கியன வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், லோக்கூர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி, பாப்தே, ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

. இதுதவிர, சமூக நீதி தொடர்பான புகார்கள், தேர்தல் முறைகேடு புகார்கள், ஆட்கொணர்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றையும் தீபக் மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.