பிக்பாஸ் போட்டியில் கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி…!

நேற்றைய தினம் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும். அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் நாம் காண முடிகிறது.

பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி கன்ஃபஷன் ரூமில் கதறி அழுது பேசுவது போல காட்டப்படுகிறது. மேலும் இதில் தன்னை கார்னர் செய்வதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.