சென்னை,

திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து நடிகர் சங்க தலைவர் முக்கிய விஷால் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி  தமிழக திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே  வசூலிக்க வேண்டும் என நடிகர் மற்றும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு திரைப்படங்களை பார்க்க திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், கட்டண உயர்வு போதாது என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தமிழக அரசின்  கேளிக்கை வரியை ரத்து செய்யவும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிவித்து உள்ளார்.

திரையரங்குகளில் இருக்கும் கேன்டீன்களில் எம்ஆர்பி (அதிகபட்ச விலை நிர்ணயம்) விலையில்தான் பொருட்களை விற்க வேண்டும்.

படம் பார்க்க வரும் ரசிகர்களை தண்ணீர் பாட்டில் கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும்.

தொடர்ந்து, அம்மா தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும்.

வாகனங்கள் நிறுத்தவதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.

இந்த விதிகளை மீறும் திரையரங்குகள் மீது அரசிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் இணையத்தளம் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணமும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.