கெய்ரோ: அடையாள அட்டைகளில், பெண்கள் படம் இடம்பெறுவது குறித்த புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது செளதி அரேபிய அரசு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அந்தப் புதிய விதிமுறைகளின்படி, அடையாள அட்டைகளில் இடம்பெறும் படங்களில் கண்ணாடி அணிந்திருப்பதோ அல்லது கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவதோ கூடாது.

அந்தப் புகைப்படத்தில், வெள்ளைநிற பின்னணியுடன், ஹிஜாப் அணிந்து பெண்கள் தோன்ற வேண்டும். மேலும், புகைப்படம் எடுக்கையில், குறைவான அளவில் அரிதாரம் பூசிக்கொள்ளவும் புதிய விதிமுறையில் அனுமதியளிக்கப்படுகிறது.

தகுதிவாய்ந்த செளதியின் பெண் குடிமக்கள், அதிகாரப்பூர்வ அடையாள ஆவணத்திற்கு விண்ணப்பிப்பதை சமீபத்தில் கடமையாக்கியது அந்நாட்டு அரசு. அந்நாட்டைப் பொறுத்தவரை, 15 வயதை எட்டும் ஒவ்வொருவரும், அடையாள அட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்தல் அவசியமானதாகும்.