Random image

கணைய புற்றுநோயை குணப்படுத்த புதிய ஆராய்ச்சி

ஸ்கிளிரோசிஸ் நோய்க்கு பயன்படும் மருந்துகளை கொண்டு கணைய புற்றுநோயை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை நிர்வாகத்தின் அனுமதி பெற்ற மருந்துகளை கொண்டு கணைய புற்றுநோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
pancreatic
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி பயோ டெக்னாலஜி மையம் மற்றும் பிராந்திய புற்றுநோய் மையம் இணைந்து கணைய புற்றுநோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இதன் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்ட மருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் உள்ளது.

ஸ்கிளிரோசிஸ் எனப்படும் உடல்செல்கள் செயலிழக்கும் நோயை குணப்படுத்த பயன்படும் S1PR1 மருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மீண்டும் வளர செய்வதுடன் அவைகள் புலம் பெயரவும் உதவுகிறது. “ இந்த மருந்தின் மூலம் கணைய புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதன் வீரியத்தை தடுக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மருந்துகள் கணையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்பதுடன் புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது” என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள Dr.கே.பி.ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மருந்தான NF-kappaB புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். முதலில் இந்த மருந்துகளை எலிகளின் உடம்பினுள் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. ஆய்வில் புற்றுநோய் உருவாகும் மூலக்கூறுகளை இந்த மருந்துகள் கட்டுப்படுத்துவது தெரிய வந்தது. இதனால் புற்றுநோய் உயிரணுக்கள் உள்ள செல்களின் பெருக்கம் குறைவதுடன் எதிர்மறை ஆக்சிஜன் உள்ள செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட செல்கள் இடம்பெயர்வதையும் தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

You may have missed