Random image

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி:

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. சமீபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய 20 ரூபாய் நோட்டு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது.

மோடி அரசு பதவி ஏற்றதும் அனைத்து ரூபாய் நோட்டுகளின் அளவு மற்றும் வண்ணம் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டதை  தொடர்ந்து ரூபாய் நோட்டுக்கள் பல வண்ணத்தில் பலவித மாற்றங்களுடன் வெளியிடப்பட்டு வருகிறது,.

ஏற்கனவே புதிய 2000 ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய்,  10 ரூபாய் என பல ரூபாய் நோட்டுக்கள் கண்ணை கவரும் வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுக் களை வெளியிட  இருப்பதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.