புதுடெல்லி: மத்திய அரசின் விதிமுறைகளின்படி, நீங்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும், வேறுசில விஷயங்களுக்காக நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருக்கும்.

ஜுலை 5ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு ஆண்டில் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்திருந்தாலோ, வங்கியின் கரண்ட் அக்கவுண்டில் உங்கள் சார்பாக ரூ.1 கோடிவரை டெபாசிட் செய்திருந்தாலோ, நீங்கள் வரிசெலுத்தும் வரையறைக்குள் வந்துவிடுவீர்கள்.

இதுமட்டுமல்ல, ஒரு ஆண்டில் நீங்கள் கட்டும் மின் கட்டணம் ரூ.1 லட்சத்தை தொட்டால் அப்போதும் நீங்கள் வரிசெலுத்தும் வரம்பிற்குள் வந்து விடுவீர்கள். எனவே, எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. எனது வருமான வரம்புதான் ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தை தாண்டவில்லையே என்றெல்லாம் நீங்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது.