சென்னை,

மிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

மணல் தேவைக்கு வெப்சைட் மற்றும் ஆப் அறிமுகம் செய்து வைத்த முதல்வர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் மூலம், ரூ.300 கோடி செலவில் 2,065 ஏரிகள் தூர்வாரப்படும் என்றார்.

ஸ்டாலின் ஏரிகளை தூர்வாரும் முன்பே, தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி செலவில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது என்றும், ஆறுகள், ஓடைகளில் மணல் எடுக்க பாதை அமைக்கப்படுவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகை யில் புதிய மணல் குவாரிகள் ஏற்படுத்தப்படும் என்றார். விரைவில் மணலுக்கு தேவயான பணத்தை  ஆன்லைன் மூலம்  செலுத்தும் வசதி  ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முழுவதும்  சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.  மதுரை மாட்டுத்தாவணி முதல் திருமங்கலம் வரை ரிங்ரோடு அமைக்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று கூறினார்.