டில்லி

கேரளாவில் நடந்த இந்து இஸ்லாமியர் கலப்புத் திருமணம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தும் இன்னும் சர்ச்சை தொடர்கிறது.

கேரளாவின் கண்ணனூரைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண்ணும் இஸ்லாமிய இளைஞரும் வீட்டை விட்டு சென்று மனஈ செய்துக் கொண்டனர்.   பிறகு போலீசார் அவர்களை அரியானா மாநிலத்தில் கண்டு பிடித்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.    இந்த திருமணம் செல்லாது என பெற்றோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தத்திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தது.  இந்த செய்தி நமது பத்திரிகை.காம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அதன் பின் அந்த இஸ்லாமிய இளைஞர் தீவிரவாத இயக்கமான ஐ எஸ் ஐ எஸ்க்கு ஆதரவாக தனது முகநூலில் பதிந்துள்ளார். இதை சுட்டிக் காட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் இது குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் எனவும் அதுவரை தனது மகளை கணவருடன் அனுப்ப முடியாது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர் தனது மனைவியை கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை அளித்துள்ளார்.   அதற்கு பெண்ணின் பெற்றோர் அந்த இளைஞர் தன் மகளை வசியப்படுத்தி விடுவார் எனக் கூறி மறுத்தனர்.   ஆனால் அதை மறுத்த நீதிமன்றம் வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று அந்தப் பெண் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைனில் விசாரிக்கக் கோரி அந்தப் பெண்ணின் தந்தை அளித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.   மேலும் அந்த இளைஞர் தீவிர வாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் அந்தப் பெண் அவர் மேல் காதல் கொள்வதை சட்டத்தால் தடுக்க முடியாது.   அவள் வயது வந்த பெண் என்பதால் அவளுடைய சம்மதம் மட்டுமே தேவை எனவும் கருத்துக் கூறி உள்ளது