நாமே உருவாக்கும் இன்சுலின் அமெரிக்காவில் open insulin புதிய திட்டம்

மெரிக்காவில்  நீரிழிவு நோய் என்பது மிக அதிகமான செலவினங்களை கொண்டதாக இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த  உடல்நலன் சார்ந்த வருமானம் 327 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதில் 15 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இன்சூலின் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது.

2002 ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை இன்சுலின் வரை முன்று மடங்களில் ஏறியது. 2012-2016 கால கட்டத்தில் இன்சலின் விலை 2 மடங்காக ஏறியுள்ளது என்பதை அறியலாம், 1996 ல் Humalog இன்சுலின் குப்பியின் விலை 21 அமெரிக்க டாலர், ஆனால் இன்றோ  324க்கு அமெரிக்கா டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏறக்குறைய 1400ு விலை அதிகமாகியுள்ளது.

சுகாதார காப்பீடு இல்லாதவர்களுக்கான மருத்துவ செலவு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் ஆகும் என்கிறார்கள். இதனால் அவர்களின் வருமானத்தில் பெரும்பகுதி மருத்துவே செலவுக்கே சரியாகிவிடும்

இந்நிலையில்தான் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணினி விஞ்ஞானி அந்தோனி டி பிராங்கோ 2015 ஓபன் இன்சுலின் என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தமக்குத்தேவையான இன்சுலினை தானே உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்

பட விளக்கம் : இடமிருந்து வலமாக  டேவிட் ஆன்டர்சன், மைக்கேல் David Anderson, மைக்கேல் அரென்ட், மற்றும் ஆபன் இன்சுலின் அமைப்பு தோற்றுநர்  டி ஃபிராங்கோ

எந்தவொரு காப்புரிமையையும் மீறாத மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய இன்சுலின் உருவாக்குவதே ஓபன் இன்சுலின் திட்டத்தின் குறிக்கோளாகக்கொண்டு  இந்த குழு நவம்பர் 2015 இல் ஒரு மக்களிடம்  16,000 அமெரிக்க டாலரை திரட்டி, ஆய்வில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் இறுதியில் ஈ.கோலியில் இருந்து புரதத்தை உற்பத்தி செய்யத் தவறிவிட்டனர். எனவே ஒன்றரை வருடம்  கழித்து ஈ.கோலியை கைவிட்டு ஈஸ்டுக்கு மாறினர்.

பிரெஞ்சு உயிர் வேதியியலாளர் யான் ஹுவான் டி கெர்மடெக்  இந்தக் குழுவில் சேர்ந்து உற்பத்தி செயல்முறையை பொறுப்பினை எடுத்துக் கொண்டார். கடந்த 18 மாதங்களில், அவர் சரியான இன்சுலின் மரபணுவைப் பெற்று, அதை ஈஸ்ட்களின் டி.என்.ஏவில் செலுத்தியுள்ளார், மேலும் சிறிய  இன்சுலின் புரதத்தினை  உற்பத்தி செய்தார்.

அவரும் அவரது ஆய்வக உதவியாளருமான ஆண்டர்சன் – ஈஸ்டின் வெவ்வேறு தொகுதிகளில இப்பரிசோதனை செய்து, உற்பத்தியை அதிகரிக்க முடியுமா என்று ஆராய்ந்துவருகிறார்கள் டி ஃபிராங்கோ தலையிலான  குழுவினர்

இவர்களின் முயற்சி வெற்றியடைய பத்தரிக்கை.காம் வாழ்த்துகள். இதுபோன்ற முயற்சிகள் முழுமையான வழிகாட்டுதல்கள் இருந்தால் இந்தியாவிலும் மருத்துவத்துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்

மேலும் விபரங்களுக்கு

http://openinsulin.org

=செல்வமுரளி

 

கார்ட்டூன் கேலரி