திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக நலிவடைந்த சுற்றுலா துறையை ஊக்குவித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் வகையில், சலுகைகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் கட்டணங்களை அறிவித்துள்ளது கேரள மாநில அரசு.

கொரோனா பரவல் மற்றும் உலகளாவியப் போக்குவரத்து தடைகளின் காரணமாக பாதிக்கப்பட்ட பல அம்சங்களுள், கேரளாவின் சுற்றுலாத் தொழிலும் உண்டு. கடந்த 5 மாதங்களாக அங்கே சுற்றுலா தொடர்பாக தொழில்களும் இல்லை, வருவாயும் இல்லை.

இந்நிலையில், அத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில், அம்மாநில அரசின் சார்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சுற்றுலா நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன்தொகையும், அத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20000 முதல் ரூ.30000 முதல் கடன்தொகையும் வழங்கப்படும்.

மேலும், படகு வீடுகள் தொடர்பாகவும் சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் செப்டம்பர் முதல் சுற்றுலாத் துறைய‍ை திறப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.