புதிய தலைமைச் செயலக வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை

--

சென்னை:

திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளனர்.

திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, ஜெ. முதல்வராக இருந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து திமுக தாக்கல் செய்த வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு கடந்த 2015ம்ஆண்டு உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

அதைத்தொடர்ந்து கிட்ப்பில் போடப்பட்ட இந்த விசாரணை, சமீபத்தில் நீதிபதியின் கண்டனத் தால்,  ஆணைய தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி  ரகுபதி ராஜினாமா செய்தார்.  அதைடுத்து,  ஆணையத்தை  கலைத்துவிட்டு, வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மேல்முறையீட்டு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழக அரசின்  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க இதுவரை எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என தி.மு.க. தரப்பிலும், ஆரம்ப கட்ட விசாரணை முடிந்த பின் வழக்கு பதிவு குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நவம்பர் 9 வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.