குஜராத்தில் காரி  ஆற்றுத் தண்ணீரில் புது வகை இறால் கண்டுபிடிப்பு

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் உள்ள காரி ஆற்றில் புது வகை இறால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காரிடினா குட்சி பகுதியில் இவை அதிகம் இருப்பதால், இதற்கு காரிடினா இறால் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள், இதனை கண்டுபிடித்த 36 வயது பேராசிரியர் பிரணவ் பாண்ட்யா மற்றும் டாக்டர் ஜாஸ்மின் ரிச்சர்டு.

கடற்சார்ந்த படிப்பு பயின்ற பிரணவ் கண்டுபிடித்த புதுவகை இறால் குறித்த ஆராய்ச்சி கட்டுரை சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடல் சார்ந்த ஆராய்ச்சியில் என் இணை ஆசிரியர் டாக்டர் ஜாஸ்மின் ரிச்சர்டுடன் ஈடுபட்டபோது இந்த புது வகை இறாலை கண்டுபிடித்தோம் என்கிறார் பிரணவ் பாண்ட்யா.

சில இறால்களை பிடித்து வந்து ஆராய்ச்சி செய்தோம். இறுதியில் அந்த இறாலுக்கு ஜீனஸ் கார்டினோ என்று பெயரிட்டோம் என்றார்.

இந்த இறாலை உள்ளூர் மக்கள் உணவுக்காக பிடித்துச் செல்கின்றனர். சில இறால்கள் விலை போகாது. மேற்கத்திய நாடுகளில் இந்த வகை இறால்களை அலங்காரத்துக்காகவும், தொட்டிகளிலும் வளர்க்கின்றனர்.

இந்தியாவில் 33 வகை இறால்கள் உள்ளன. குஜராத் மாநிலம் குட்சில் கிடைத்த இறால் இவற்றிலிருந்து மாறுபட்டது. இது 3-4 அங்குலம் நீளமானவை.
மழை காலங்களில்தான் இந்த வகை இறால்கள் அதிகம் கிடைக்கும்.

இன்னும் புதிய வகை இறால்கள் நிச்சயம் இந்த பகுதியில் இருக்கும். தென்னிந்தியாவில் ஏற்கெனவே கார்டினா பாபால்டி எனப்படும் ஒரு வகை இறால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உப்பில்லாத நல்ல தண்ணீரில் இறால் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றார் பிரணவ்.

 

 

Leave a Reply

Your email address will not be published.